ஈரோடு: காஞ்சிக்கோவில் அருகே பொது இடத்தில் மது அருந்தியவர் கைது

காஞ்சிக்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.;

Update: 2022-09-17 12:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருக்கம்பாளையம் எல்பிபி வாய்க்காலில் பொது இடத்தில் மது குடித்த பெத்தாம்பாளையம் அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சுந்தரம் (22) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News