மத்திய அரசின் காயகல்ப் விருதுக்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை தேர்வு

மத்திய அரசின் காயகல்ப் விருதுக்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-05-03 01:30 GMT
மத்திய அரசின் காயகல்ப் விருதுக்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை தேர்வு

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பைல் படம்

  • whatsapp icon

மத்திய அரசின் காயகல்ப் விருதுக்கு தமிழ்நாடு அளவில் இரண்டாம் இடம் பெற்று சிறந்த மருத்துவமனையாக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்புற தூய்மை மற்றும் வௌிப்படை தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனைக்கு காயகல்ப் விருது வழங்கப்படுகிறது.

இதில், இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 91.86% மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதன் மூலம் ஈரோடு மருத்துவமனைக்கு பரிசுத் தொகையாக ரூ.20 லட்சம் வழங்கப்படவுள்ளது.

Tags:    

Similar News