ஈரோடு: முன்னாள் படைவீரர் கொடி நாள் நிதி வசூல் இலக்கு நிர்ணயம்
இந்த ஆண்டுக்கான கொடி நாள் நிதி வசூல் ரூ.1,03,68,000 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார்.;
ஆண்டு தோறும் டிசம்பர் 7-ம் தேதி நாடு முழுவதும் படைவீரர் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உண்டியலில் பணம் செலுத்தி முன்னாள் படை வீரர் கொடி நாள் நிதி வசூல் பணியை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் சென்ற ஆண்டு படைவீரர் கொடி நாள் நிதி வசூல் ரூ.86,40,000 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.1,30,24,600 நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான கொடி நாள் நிதி வசூல் ரூ.1,03,68,000 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார்.