ஈரோடு- கொரோனா மருத்துவமனை கட்ட ரூ.1 கோடி நிதி வழங்கல்
பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் கொரானா நோயாளிகளுக்கான மருத்துவமனை கட்டும் பணிக்கு, ஆதித்யா மசாலா நிறுவனம் ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த கொரானா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு சாதாரண மற்றும் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல், நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
இதனால், 1,000 படுக்கைகளுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் நோயாளிகள் தங்கும் வகையில், மூன்று, நான்கு கட்டடமாக அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் உதவியுடன் கட்டடங்கள் கட்டப்படுகிறது.
இம்மருத்துவமனைக்கு கட்டிடம் கட்டுவதற்காக, ஆதித்யா மசாலா நிறுவனம் சார்பில், நானி அக்ரோ புட்ஸ் தலைவர் ஹரி போடர், ஒரு கோடி ரூபாய் நிதியை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கினர். இந்த நிகழ்வின் போது, லோட்டஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சகாதேவன் உட்பட பலர் உடனிருந்தனர்.