ரோட்டை சீரமைக்க வேண்டும் : வணிகர்கள் மனு

ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வணிகர்கள் மனு அளித்தனர்.

Update: 2021-04-09 16:34 GMT

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு இன்று வீரப்பன்சத்திரம் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் பிரதிநிதிகள் வந்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 14 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் நடைபெற்று வருகிறது. இதைப்போல் ஈரோடு மாநகராட்சி குட்பட்ட வீரப்பன்சத்திரம், பாரதி தியேட்டர் சாலையில் குழாய் அமைப்பதற்காக 175 நாட்களுக்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது. அந்த ரோடு இன்னும் சீரமைத்து தரப்படவில்லை. குண்டும் குழியுமாக இருப்பதாலும் சாலையில் எழும் புழுதியால் அப்பகுதியில் வாசிப்பவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த பகுதி 5 கடைகள் மூடப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் வியாபாரிகள் தற்போது மேலும் பாதிப்படைந்து வருகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர்களது கூறியிருந்தனர்.

முன்னதாக சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி இனிப்பு வழங்கி நூதன முறையில் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அந்த போராட்டத்தை கைவிட்டு மாநகராட்சி ஆணையாளரை பார்த்து மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News