ஈரோட்டில் குருத்தோலை ஞாயிறு பவனி

Update: 2021-03-28 07:00 GMT

கிறிஸ்தவ மக்களின் புனித வழிபாடான குருத்தோலை ஞாயிறு இன்று ஈரோட்டில் நடைபெற்றது.

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு இன்று ஈரோடு பிரப் சாலையில் அமைந்துள்ள சிஎஸ்ஐ திருச்சபையில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். கொரோனா மற்றும் சட்டமன்றத் தேர்தல் விதிமுறை உள்ளதாலும் இம்முறை தங்களின் திருச்சபை வளாகத்தினுள்ளேயே வலம் வந்து பிரார்த்தனை செய்தது தங்களுக்கு மிகுந்த வருத்தம் என்று தெரிவித்ததோடு அடுத்த ஆண்டு இதுபோல எந்த ஒரு தடையும் இல்லாமல் தொற்று நோய்களின் பாதிப்பு இல்லாமல் எல்லா மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே தங்களின் இன்றைய பிரார்த்தனை என்றும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News