ஈரோடு வழியாக பழனிக்கு பாதயாத்திரை

போலீஸ் சார்பில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர், ஒளிரும் பட்டை கடந்த ஆண்டு வழங்கப்பட்டது, இந்த ஆண்டு வழங்கப்படவில்லை.

Update: 2021-01-15 17:40 GMT

ஒவ்வொரு வருடமும் தை பூசத்தன்று பழனி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் வரும் 28ஆம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் விரதமிருந்து இரவு பகல் முழுவதும் பாதயாத்திரையாக செல்ல தொடங்கியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பழனிக்கு பாதயாத்திரையாக செல்ல தொடங்கியுள்ளனர். பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஆங்காங்கே தன்னார்வலர்கள் அரசியல் கட்சியினர் உணவு தண்ணீர் வழங்கி வருகின்றனர். கடந்த வருடம் பழனிக்கு செல்லும் பக்தர்களுக்கு போலீஸ் சார்பில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர், ஒளிரும் பட்டை வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் இதுபோன்று எதுவும் வழங்கப்படவில்லை. ஒளிரும் ஸ்டிக்கர் ஒளிரும் பட்டை வழங்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஈரோட்டில் பல்வேறு பகுதியில் இருந்து பழனிக்கு பாத யாத்திரையாக 100க்கும் மேற்பட்டவர்கள் நடந்து சென்றனர். அவர்களுக்கு ஈரோடு சோதனை சாவடி அருகே அ.தி.மு.க பெரியசேமூர் பகுதி சார்பில் பகுதி செயலாளர் தங்கமுத்து தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் கோவிதராஜ் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News