மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே புதிய ஆளுனர்: முத்தரசன்

பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் அரசுக்கு குடைச்சல் கொடுக்க ஆளுநரை மத்திய அரசு பயன்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டினார்.

Update: 2021-09-12 06:45 GMT

ஈரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிய முத்தரசன். 

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா, ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பாரதியின் திருவுருவ படத்திற்கு, அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முத்தரசன் கூறியதாவது: பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதிக்கு மத்திய அரசு இருக்கை அமைக்க இருப்பது வரவேற்தக்கது. 11 கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 20 ம் தேதி முதல், 30 ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இயக்கங்கள் நடத்தப்படும்.

வரும் 27ம் தேதி மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் வேளாண் சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். ஆளுநராக யார் வந்தாலும் மோடியின் ஏஜென்ட்கள் என்பதால் அவர்கள் ஏஜென்ட் வேலையை செய்வார்கள். பா.ஜ.க ஆளாத மாநிலத்தில் ஆளுநர் மூலம் மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்க ஆளுரை மத்திய அரசு பயன்படுத்துகிறது. மத்திய அரசு எதை விரும்புகிறதோ, எதை செய்ய சொல்கிறதோ அதை நிறைவேற்றக்கூடியவர் தான் ஆளுநர்.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பதில் தமிழக அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் கொடநாடு கொலைகள் உட்பட ஏற்கனவே நடந்த கொலைகள் போல், தற்போது கொலைகள் அதிகம் நடப்பதில்லை. இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Tags:    

Similar News