நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிய எம்எல்ஏ திருமகன் ஈவெரா!
ஈரோட்டில், ரேஷன் கடைகளில் 2ம் கட்ட நிவாரணத்தொகை, மளிகை பொருட்கள் எம்எல்ஏ திருமகன் ஈவெரா பொதுமக்களுக்கு வழங்கினார்.
கொரோனா நிவாரணத்தொகையாக ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, 14வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2ம் கட்ட கொரோனா நிவாரணத்தொகை ரூ.2ஆயிரம், மளிகைப்பொருட்கள் வழங்கும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது. ஈரோட்டில் கொரோனா நிவாரண தொகை, 14 வகையான மளிகை பொருட்கள் ரேஷன்கார்டு தாரர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. வைராபாளையம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள ரேஷன் கடையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா, நிவாரணப்பொருட்கள் கொண்ட தொகுப்பு பையினை, பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நாராயண வலசு, குமலன் குட்டை, பிராமண பெரிய அக்ரஹாரம் ரேசன் கடைகளை சேர்ந்த பொதுமக்களுக்கு நிவாரணத் தொகுப்பை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்டத்தலைவர் ஈ.பி.ரவி, ஈரோடு தெற்கு மாவட்டத்தலைவர் மக்கள் ஜி.ராஜன், திமுக பகுதி செயலாளர் வி சி நடராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவர் கே என் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.