ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல்: ஈரோடு மாநகராட்சி அதிரடி
ஈரோடு, சத்தி ரோட்டில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு,மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.;
ஈரோடு சத்தி ரோட்டில், ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கொரோனா நோய்ப்பரவலைத் தடுப்பதற்காக ஈரோடு மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 வாரங்களாக முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்ட போதும், மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சத்தி ரோட்டில், கண்காணிப்புப் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜவுளிக்கடை, பெயிண்ட கடை, ஹார்டுவேர் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருவதைக் கண்டறிந்தனர்.
இதனையடுத்து போலீசார் உதவியுடன், 3 கடைகளுக்கும் சீல் வைத்தனர். மேலும், அரசின் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாத 9 கடைகளுக்கு தலா, 5 ஆயிரம் வீதம் 45 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டது. அரசின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று, ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.