ஈரோடு: காவல்துறை சார்பில் 'காக்கும் கரங்கள்' அமைப்பு உருவாக்கம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் 'காக்கும் கரங்கள்' அமைப்பினை, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், ஈரோட்டில் தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-24 13:06 GMT

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில்,  போலீசார் சார்பி, 'காக்கும் கரங்கள்'  என்னும் அமைப்பின் துவக்க விழா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் , கோவை சரக துணைத்தலைவர் முத்துச்சாமி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் ஆகியோர் பங்கேற்று, அமைப்பை தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம், மேற்கு மண்டல தலைவர் சுதாகர் கூறியதாவது: மேற்கு மண்டலத்தில் குழந்தை திருமணங்கள், போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்கவே, 'காக்கும் கரங்கள்' அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 128 பகுதிகள் குழந்தை திருமணம் அதிகமாக நடக்கும் இடங்களாக கண்டறிப்பட்டுள்ளன. அதை தடுக்க, காவல்துறையினர், சமூக நலத்துறையினர், தன்னார்வர்கள் இணைந்த, 34 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் 9655220100, என்ற எண்ணில் புகார் செய்யலாம்.

சேலம் மாவட்டத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு விவசாயி உயிரிழந்தது தொடர்பாக காலதாமதமின்றி சம்பந்தப்பட்ட காவலர் மீது உடனடியாக கொலை வழக்கு பதியப்பட்டு,  கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொதுமக்களை காக்கவே காவல்துறையினர்; அவர்களை அழிப்பதற்காக அல்ல என அனைவருக்கும் அறிவுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News