ஈரோடு மாநகர் மக்கள் குறைதீர்க்க 24 மணிநேரம் செயல்படும் வாட்ஸ்அப் எண்

ஈரோடு நகரில், பொதுமக்கள் புகார் தெரிவிக்க 94890 92000 என்ற வாட்ஸ்அப் எண் பயன்பாட்டை அமைச்சர் முத்துசாமி துவக்கிவைத்தார்.

Update: 2021-07-20 07:45 GMT

ஈரோடு மாநகராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர், பொது சுகாதாரம், தெருவிளக்கு, சாலை மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு முதலிய பணிகள் தொடர்பான குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ்அப் எண் அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 94890 92000 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், மாநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் 94890 92000 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாக புகார் தெரிவிக்கலாம். புகார்கள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு அதன் விபரம் புகார்தாரருக்கு தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தரும் புகாருக்கு உடனடியாக நடவடிக்கைகளை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புகாரின் தன்மைக்கேற்ப கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டு பிரச்சனைகள் சரி செய்யப்படும் என கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எம்.பி.கணேசமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News