குடியிருப்பு பகுதியில் வீசப்பட்ட காலாவதி மருந்து, மாத்திரைகள்
காரைவாய்கால் கரையோர குடியிருப்பு பகுதியில், காலாவதி மருந்து, மாத்திரைகளை வீசி, எரித்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
ஈரோடு மாவட்டத்தின் மையப்பகுதியில் காரைவாய்க்கால் கரையோர பகுதியில் பல நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கரையின் மறுபுறத்தில் மர்ம நபர்கள் அவ்வப்போது குப்பைகள் மதுபாட்டில்கள் வீசி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் காலாவதியான மருந்து மாத்திரைகளை வீசி சென்றுள்ளனர். இதில் சில மாத்திரைகளை தீ வைத்து எரித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட நச்சு புகையின் காரணமாக அப்பகுதி மக்கள் சுவாசிக்க சிரமப்பட்டனர். அப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், விவசாயிகள், குழந்தைகள், குடியிருக்கும் மக்களும், கால்நடைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக, பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, அவக்ரள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.