ஈரோடு பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை சம்பத் நகர் என பெயர் மாற்றம்

ஈரோடு பகுதியிலுள்ள பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை சம்பத் நகர் என பெயர் மாற்றம் செய்து முதலவர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.;

Update: 2021-10-04 06:45 GMT
ஈரோடு பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை சம்பத் நகர் என பெயர் மாற்றம்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி , ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி , கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா.

  • whatsapp icon

சுதந்திரப்போராட்ட தியாகி கொடி காத்த குமரனின் 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கொடிகாத்த குமரனை மேலும் கௌரவிக்கும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியின் முக்கிய பிராதான சாலைகளின் ஒன்றான சம்பத் நகர் சாலைக்கு "தியாகி குமரன் சாலை சம்பத் நகர்" என புதிதாக பெயர் மாற்றம் செய்து அறிவிக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி , மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி , கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News