ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில், கடந்த 10 நாட்களில் மட்டும் சட்ட விரோதமாக மது விற்றதாக 214பேரை போலீசார் கைது செய்து, 7,621 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2021-06-19 12:36 GMT

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடந்த மாதம் 10ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் மதுபாட்டில்களை கடத்தி வந்து மாவட்டத்திற்குள் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

மேலும், சிலர் தடை செய்யப்பட்ட சாராயத்தையும், கள்ளினையும் விற்பனை செய்து வந்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி சசி மோகன் உத்தரவிட்டார். இதன்பேரில், கடந்த 10 நாளில் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்றதாக 216வழக்கு பதிவு செய்யப்பட்டு, 214பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கர்நாடகா மதுபாட்டில்கள் 6,310, தமிழக மதுபாட்டில்கள் 1,311 என 7,621 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதுமட்டும் அல்லாமல் 122லிட்டர் சாராயம், 3,350 சாராய ஊறல், 250 லிட்டர் கள், கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் மது கடத்த பயன்படுத்தியதாக 36 இரு சக்கர வாகனங்கள், 16 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு லாரி என 53 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அரசுடமையாக்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மது விற்போர் குறித்து பொதுமக்கள் 96558-88100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News