ஈரோட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல்விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
பெட்ரோல் டீசல்விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.
அதன்படி ஈரோடு மாவட்ட தேமுதிக சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், வீரப்பன்சத்திரம் பகுதியில் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தொண்டர் அணி செயலாளர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயு, மின்சாரம், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். கொரோனா பரவிலின் போது திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. முன்னதாக கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.