ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கல்
ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி உட்பட 19 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.;
ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் மாவட்ட கண்காணிப்பாளர்.
ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்க சங்கத்தின் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் கலந்து கொண்டு அத்தியாசிய பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள் போன்ற 19 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொருட்களை அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் வழங்கினார்.
இதையடுத்து சத்தியமங்கலம்,கோபிச்செட்டிபாளையம்,அந்தியூர்,பவானி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற தாலுக்கா பத்திரிக்கையாளர்களுக்கு சரக்கு வாகனம் மூலம் அவர்களின் இடத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நலச்சங்க செயலாளர் ஜீவா தங்கவேல்,பொருளாளர் ரவிச்சந்திரன், தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தலைவர் சண்முகம் உட்பட சங்க நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.