ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் உட்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.;
ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக வை அபகரிக்க முயற்சி செய்வதாக சசிகலாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுரைப்படி கொரோனோ நோய் தொற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களில் உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துவது.கொரோனோ நோய் தொற்று தீவிரமாக இருக்கும் காலத்தில் தடுப்பூசிகள் போடுவதற்கு மக்களை அலைகழிக்கும் தமிழக அரசை கண்டிப்பது, நீட் தேர்வு, கச்சத்தீவு, மீத்தேன் திட்டம் கண்டிப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, அவைத்தலைவர் ராமசாமி, எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் சிவசுப்ரமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.