சிறுபான்மையினரின் அரணாக இருப்பது திமுக கூட்டணி தான்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது திமுக கூட்டணி கட்சிகள்தான் என்று ஈ.வி.கேஸ்.இளங்கோவன் ஈரோட்டில் நடந்த பிரசார கூட்டத்தில் தெரிவித்தார்.;

Update: 2021-03-26 03:45 GMT

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளர் சு முத்துச்சாமி ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமகன் ஈவெரா ஆகியோரை ஆதரித்து பிரசார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது :

தமிழகத்தில் நடைபெறவுள்ளது தேர்தல் யுத்தம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் சர்வாதிகாரியாக வரவேண்டும் என்று துடிக்கிற மோடிக்கும், நாட்டின் ஜனநாயகம், ஒருமைப்பாடு காப்பாற்றுவதற்கும், சமூக நீதி நிலைநாட்டுவதற்கான சக்திக்கும் நடக்கின்ற தேர்தல்.

திமுக தலைவர் நிச்சயம் முதல்வராக வருவார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அதிக வாக்குகள் பெறும் என்றும் சிறுபான்மையின மக்களுக்கு அரணாக திமுக கூட்டணி கட்சிகள் தான் உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News