தேமுதிக 17ம் ஆண்டு தொடக்க விழா : ஈரோட்டில் உற்சாக கொண்டாட்டம்
ஈரோடு மாநகர் மாவட்ட தேமுதிகவினர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 17 ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேமுதிக வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் கழக கொடி ஏற்றப்பட்டு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முன்னதாக கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக சென்ற மாநகர தேமுதிகவினர் வ.உ.சி பூங்கா மைதானம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதனை தொடர்ந்து கழக நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பாலாஜி, மாவட்ட கழக துணைச்செயலாளர்கள், ரங்கராஜ், ராம்செந்தில்குமார், தாமரைச்செல்வி, செயற்குழு உறுப்பினர்கள் குமார், சஞ்சய்குமார், கேப்டன் மன்ற செயலாளர் கிருஷ்ணராஜ், கேப்டன் மன்ற துணை செயலாளர்கள் ஆனந்தன், மோகன்ராஜ், இளைஞரணி செயலாளர் முருகேசன், இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ், மகளிர் அணி செயலாளர் ரம்யா, தொண்டரணி செயலாளர் சாதிக்பாட்ஷா, தொண்டரணி துணை செயலளார் தினேஷ்குமார், மாணவரணி துணை செயலாளர் பூபேஷ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் மூர்த்தி, ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட நிர்வாகி மணிகண்டன், சூரம்பட்டி பகுதி பொறுப்பாளர் வேல்முருகன், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் மோகனசுந்தரம், சூரியம்பாளையம் பகுதி பொருளாளர் மணிகண்டன், சூரியம்பாளையம் பகுதி துணை செயலாளர் சங்கர், வட்ட செயலாளர் சிவா, கார்த்திகேயன், சஞ்சீவி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொணடர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.