முன்களப்பணியாளர்களுக்கு கபசூர குடிநீர், மாத்திரைகள் வழங்கல்

ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில், முன்களப் பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீரும், சத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.;

Update: 2021-06-06 12:13 GMT

ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில், முன்களப்பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. 

கொரோனா பேரிடர் காலத்தையொட்டி ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தற்காலிக சோதனைச் சாவடிகளில், 200க்கும் மேற்பட்ட காவல்துறையினரும்,100க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இரவு பகலாக தொடர்ந்து பணி புரிந்து வரும் முன்களப் பணியாளர்களுக்கு, ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் மாநகராட்சியின் சார்பில், கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜீ கலந்து கொண்டு கபசூரக்குடிநீர் மற்றும் சத்துமாத்திரைகளை வழங்கினார்.

இதேபோல், பணி முடித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட்டுச் செல்லும் முன்களப் பணியாளர்களான துப்புரவுப் பணியாளர்களுக்கும், கபசுரக் குடிநீரும், சத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News