ஈரோடு மாநகராட்சியின் வேகம்: குறைகிறது தொற்றின் தாக்கம்

ஈரோடு மாநகராட்சியின் தடுப்பு நடவடிக்கை மற்றும் சுறுசுறுப்பான செயல்பாடுகளால், மாநகர் பகுதியில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.

Update: 2021-06-18 13:23 GMT

ஈரோடு மாநகர் பகுதியில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளத் தொடங்கியது. மாநகராட்சி சார்பில் தினமும் 3 ஆயிரம் கொரோனா பரிசோதனையும், தனியார் ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரம் பரிசோதனை என மொத்தம் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதைப்போல் மாநகராட்சி பகுதியில் உள்ள 1.30 லட்சம் வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் சளி இரும்பல் போன்ற அறிகுறி இருக்கிறதா என்று கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் 1200 தன்னார்வலர்களும், 200 மாநகராட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தினமும் வீடுவீடாக சென்று சளி காய்ச்சல் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

இதில் அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுகளிலேயே சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரே தெருவில் மூன்று வீடுகளுக்கு மேல் பாதிப்பு இருந்தால் அந்தத் தெரு தனிமைப்படுத்தப்பட்டு தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் இது போன்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் அதிவேக செயல்பாடுகள் காரணமாக தற்போது மாநகர் பகுதியில் தொற்று குறைய தொடங்கியுள்ளது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1041. மாநகர் பகுதியில் மட்டும் 170 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. முதலில் 600 என்ற இருந்த தொற்று தற்போது வேகமாக குறைந்து உள்ளது. இதைப்போல் 45 ஆக இருந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதி தற்போது 10 - ஆக குறைந்துள்ளது. 

Tags:    

Similar News