கொரோனா தடுப்பு: மார்க்கெட், பஸ் ஸ்டாண்டில் கிருமிநாசினி தெளிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு வ.உ.சி பெரிய மார்க்கெட், பஸ் ஸ்டாண்டில் கிருமிநாசினி தெளிப்பு.

Update: 2021-04-25 12:00 GMT

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள் ,வணிக நிறுவனங்கள், தெருக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தி வருகின்றனர். இதேபோன்று பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகள் அன்றும் மீன் மார்க்கெட் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், 50 -க்கும் மேற்பட்ட பழகடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று முழு வருடங்கள் காய்கறி மார்க்கெட் செயல்படவில்லை. இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் அங்கு சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பெரிய மார்க்கெட் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. இதேபோல் ஈரோடு பஸ் ஸ்டேண்ட் முழுவதும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு ரேக்பகுதியிலும், கடை பகுதிகளிலும், பஸ் நிலையம் முழுவதும் உள்ள வளாகத்திலும் மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து, ப்ளீச்சிங் பவுடர்களை தூவப்பட்டது.

Tags:    

Similar News