பாய், தலையணையோடு வந்து ஈரோடு ரயில் நிலையத்தில் காண்ட்ராக்டர் போராட்டம்

பணிகள் முடித்து 8 மாதங்களாகியும், 60 லட்சம் ரூபாய் நிலுவைத்தொகையை வழங்கவில்லை என்று கூறி, பாய், தலையணையுடன் வந்து, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஒப்பந்ததாரர் ஒருவர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-04-23 14:11 GMT

ஈரோடு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 41). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி ரயில்வே பயிற்சி விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார்..

ரூ.1.25 கோடி மதிப்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த பணி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்துவிட்டது. ஆனால் இதுவரை ரூ. 65 லட்சம் மட்டுமே ரயில்வே நிர்வாகம் துரை கண்ணுக்கு வழங்கியுள்ளதாகவும், மீதி ரூ.60 லட்சம் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, ரயில்வே நிர்வாகத்திடம் துரைக்கண்ணு பலமுறை கேட்டும் பணம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து துரைக்கண்ணு இன்று ஈரோடு ரயில்வே ஸ்டேசனுக்கு போர்வை, தலையணையுடன் வந்தார். அங்குள்ள  3-வது பிளாட்பார்மில் திடீரென அமர்ந்து காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினார்.

நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டி வைத்திருந்தார். தகவல் கிடைத்து அங்கு வந்த ரயில்வே போலீசார்,  துரைக்கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஈரோடு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு  நிலவியது.

Tags:    

Similar News