பெட்ரோல், டீசல் விலை உயர்வு : காங்கிரஸார் சைக்கிள் பேரணி

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சினர் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.;

Update: 2021-07-12 13:15 GMT

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடந்த சைக்கிள் பேரணியில் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கலந்து கொண்டார். 

பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்ப்பில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடைபெற்று வருகிறது. அவ்வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அழகிரி அண்மையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்,  ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கலந்து கொண்டார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சிஅலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியானது,  ஈரோடு பேருந்து நிலையம், தெப்பக்குளம் வீதி, பிரப் ரோடு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக மத்திய அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News