நிலம் ஆக்கிரமிப்பு : திமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்

நிலம் ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுப்பதாக, திமுக பிரமுகர் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-07-19 09:00 GMT

ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் நில அபகரிப்பு புகார் அளித்த, ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி.

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் அடுத்துள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜிக்கு சொந்தமான, ஈரோடு மாவட்டம் ஆசனுர் பகுதியில் 5 அறைகளுடன் கூடிய 75 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த இடத்திற்கு அருகே,  சேலம் மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகர் தாரை மணியன் என்பருக்கு சொந்தமான 2.10 ஏக்கர் காலி நிலம் உள்ளது.

இந்நிலையில், திமுக பிரமுகர் தாரை மணியன்,  தன்னுடைய இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகவும், இது குறித்து தாரை மணியனிடம் கேட்டதற்கு, அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுதாகவும் கூறி, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பழனிச்சாமி தரப்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும், கொலை மிரட்டல் விடும் திமுக பிரமுகர் தாரை மணியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News