பாஜக பெண்களுக்கு பாதுகாப்பற்ற கட்சியாக அறிவிக்க வேண்டும்: தமிழ் புலிகள் கோரிக்கை
பாஜகவை பெண்களுக்கு பாதுகாப்பற்ற கட்சி என அறிவிக்கக்கோரி தமிழ்புலிகள் கட்சியினர் குடியரசு தலைவருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்.;
அண்மையில் பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவனின் பாலியல் தொடர்பான வீடியோப்பதிவு ஓன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் குடியரசு தலைவருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின் போது , பாஜகவில் உள்ள நிர்வாகிகளால் அக்கட்சியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது என்றும் பாரதிய ஜனதா கட்சியை பெண்களுக்கு பாதுகாப்பற்ற கட்சி என அறிவிக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவருக்கு அனுப்பும் தபால் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.