அம்மா உணவகம் நாளை வழக்கம் போல் செயல்படும். பார்சல் மட்டும்.
நாளை முழு ஊரடங்கில் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் பார்சலில் உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று முழு நேர ஊரடங்கு பிறப்பித்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
நாளை பொது போக்குவரத்து இருக்காது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும். ஆனால் அதே சமயம் ஈரோடு மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனம், பால், மருந்து கடைகள், மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெட்ரோல் பங்க்குகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மாநகர் பகுதியில் மட்டும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. காந்திஜி ரோடு, சின்ன மார்க்கெட் பகுதி, சூளை, சூரம்பட்டி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, கொல்லம்பாளையம் உட்பட 13 பகுதிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா தாக்கம் காரணமாக உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை. மாறாக பார்சல் மட்டும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. நாளை முழு ஊரடங்கு என்றாலும் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் பார்சலில் உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மற்ற உணவகங்களும் வழக்கம்போல் இயங்கினாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும், காலை 6 மணி முதல் 9 மணி முதல் வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் மட்டும் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உழவர் சந்தையும் நாளை வழக்கம் போல் இயங்கும்.