ஈரோடு மாவட்டம் 8 தொகுதியில் ரூ.1.14 கோடி பணம் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதில் இதுவரை ரூ 1 கோடியே 14 லட்சம் பணம் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2021-03-21 06:17 GMT

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பது தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு சென்றால் பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் இது வரை ரூ.38 லட்சத்து 89 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மேற்கு தொகுதியில் 6 லட்சத்து 30 ஆயிரத்து 730 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காட்டியதால் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 430 ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதி 4 லட்சத்து 78 ஆயிரத்து 300 ரூபாய் பாக்கி உள்ளது.

மொடக்குறிச்சி தொகுதியில் இதுவரை 5 லட்சத்து 10 ஆயிரத்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காட்டியதால் 1 லட்சத்து 80 ஆயிரம் பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெருந்துறை பகுதியில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 410 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காட்டியதால் 3 லட்சத்து 72 ஆயிரத்து 10 ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பவானி தொகுதியில் 11 லட்சத்து 52 ஆயிரத்து 400 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணம் காட்டியதால் 8 லட்சத்து 82 ஆயிரத்து 400 ரூபாய் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தியூர் பகுதியில் 6 லட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய கவனம் காட்டியதால் ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

கோபி தொகுதியில் 22 லட்சத்து 22 ஆயிரத்து 600 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய கவனம் காட்டியதால் 20 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் தொகுதியில் 19 லட்சத்து 29 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணம் காட்டியதால் 4 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இதுவரை ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ .1 கோடியே 14 லட்சத்து 43 ஆயிரத்து 340 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் உரிய ஆவணங்கள் காட்டியதால் ரூ.41 லட்சத்து66 ஆயிரத்து 840 ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் 72 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் மீதம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News