தா.பாண்டியன் மறைவையொட்டி அமைதி ஊர்வலம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவையொட்டி ஈரோட்டில் அனைத்துக் கட்சி பங்கேற்ற அமைதி ஊர்வலம் நடைபெற்றது;
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் .அவரது மறைவிற்கு அனைத்துக் கட்சியினர் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோட்டில் அனைத்து கட்சிகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் தொடங்கி மேட்டூர் ரோடு வழியாக வ.உ.சி பார்க்கில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, தொழிற்சங்க சுப்பிரமணி, ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாநகர காங்கிரஸ் தலைவர் இபி இரவி, பாஜக பிரச்சார அணி முன்னாள் அமைப்பாளர் சரவணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.