மத்தியில் இணக்கமான மாநில அரசு அமைந்தால் நல்லது: ஹெச் ராஜா

"மத்திய அரசுடன் இணக்கமான அரசு மாநிலத்தில் அமைந்தால் மட்டுமே, மாநிலத்திற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும்" என பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா ஈரோட்டில் பேட்டி.

Update: 2021-02-20 13:06 GMT

கோவைக்கு வருகின்ற பாரதப் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பிஜேபியின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த H.ராஜா, 4 முதல் 5 தினங்களுக்குள் தமிழகத்திற்கான தேர்தல் தேதி வர இருப்பதாகவும், இந்த தேர்தல் மூலம் தமிழக மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் கிஷன் சமான் ஆயுஸ், மான் பாரத் போன்ற மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், ஆனால் மேற்கு வங்கம், கேரளாவில் இத்திட்டங்கள் செயலப்படுத்த வில்லை என்றும், எனவே மத்திய அரசுடன் இணக்கமான அரசு மாநிலத்தில் அமைந்தால் மட்டுமே மாநிலத்திற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்றும் H.ராஜா தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல்,சிலிண்டர் விலை ஏற்றம் என்பது சராசரியான விலையேற்றம் தான் என்றும் காங்கிரஸ் ஆட்சியை விட தற்போதைய விலை குறைவு தான் என்றார். உணவுப்பொருட்களின் விலையேற்றம் காங்கிரஸ் ஆட்சியை விட குறைவு என்றும் காங்கிரஸ் ஆட்சியில் விலையேற்றம் 3.9 சதவீதம் என்றும் பாரதிய ஜனதா ஆட்சியில் 2.6 சதவீதம் தான் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய H.ராஜா, தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் திமுக வின் பாலிசி என்றும் ஆரியர் என்பது பண்பாளர், ஆசிரியர், உயர்ந்தவர் என்பது தான் அர்த்தம் என்றும், திருவள்ளுவர் உயர்ந்தவர் என்ற H.ராஜா திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மானம் இருக்கிறதா என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

Similar News