விவசாயிகளுக்கான சிறப்பு கடன் திட்ட முகாம்

இம்முகாமில், 8.76 கோடி ரூபாய் மதிப்பில், 2,923 கடன் விண்ணப்பம் பெறப்பட்டது. தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு விரைவில் கடன் அட்டை வழங்க உள்ளனர்.

Update: 2021-01-21 13:08 GMT

ஈரோடு மாவட்டம் அரச்சலுாரில், கனரா வங்கி சார்பில், ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கான சிறப்பு கடன் திட்ட முகாம் நடந்தது. சென்னை கோட்ட அலுவலக துணை பொது மேலாளர் சண்முகம் தலைமை வகித்து, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் பற்றி பேசினார்.

ஈரோடு மண்டல உதவி பொது மேலாளர் ஜனார்த்தனராவ் முன்னிலை வகித்தார். 700க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். விவசாய கடன் திட்டம், கால்நடை அபிவிருத்தி கடன் திட்டம், வாகன கடன், அடமான கடன், தொழில் கடன்களின் முன்னுரிமை போன்றவை குறித்து விளக்கப்பட்டது.

இம்முகாமில், 8.76 கோடி ரூபாய் மதிப்பில், 2,923 கடன் விண்ணப்பம் பெறப்பட்டது. தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு விரைவில் கடன் அட்டை வழங்க உள்ளனர். ஈரோடு மண்டல அலுவலக கோட்ட மேலாளர் மீனாட்சி, முதுநிலை மேலாளர் மோகனாம்பாள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதே போன்ற முகாம், தாமரைபாளையம், நசியனுார், அந்தியூர் உட்பட பல்வேறு இடங்களில் நடந்தது.

Tags:    

Similar News