தமிழக உரிமைகள் பல இருந்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதை செயல்படுத்த அஞ்சுவதாக ஈரோட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.
ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி , காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் அதில் பொதுவிநியோக திட்ட மேம்பாடு, சிறுகுறு தொழில் வளர்ச்சி, நீட் தேர்வு ரத்து , போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன என்றார்.
காங்கிரஸ் - திமுக இடையே நிறைய கொள்கை வேறுபாடு உள்ளது என்றாலும் மதசார்பின்மை என்ற ஒத்த கருத்து காரணமாக கூட்டணியில் இணைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழக உரிமைகள் பல இருந்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்த அஞ்சுவதாக குற்றம்சாட்டினார்.