ஈரோடு மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா
இன்று மாவட்ட நிர்வாகத்தில் அனுமதியுடன் காலை, 10 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும், 10.35 மணிக்கு மேல் சின்னமாரியம்மன் கோவிலிலும் கும்பாபிேஷகம் நடந்தது.
ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. பாரியூர் காளியம்மன் கோவிலை போல, காளிங்கராயன் வாய்க்காலில் நீராடி பின் குண்டம் இறங்கும் வகையில் கோவில் நிலை மாற்றப்பட்டது. குண்டம் இறங்கும் பக்தர்களை காணும் வகையில் மூலவர் கருவறை அமைக்கப்பட்டது. இதே போல் பொன்வீதியில் உள்ள சின்னமாரியம்மன், புனரமைப்பு பணிகள் முடிந்ததையொட்டி, இன்று மாவட்ட நிர்வாகத்தில் அனுமதியுடன் காலை 10 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும், 10.35 மணிக்கு மேல் சின்னமாரியம்மன் கோவிலிலும் கும்பாபிேஷகம் நடந்தது. நேற்று முன் தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று இரண்டாம் காலம், மூன்றாம் யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கலசம் நிறுவுதல், அஷ்ட பந்தனம் சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று கும்பாபிஷேகத்தையொட்டி காரைவாய்க்கால் கோபுர கலசத்திலும், சின்ன மாரியம்மன் கோவில் கோபுர கலசத்திலும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் பங்கேற்றனர்.
கே.எஸ் தென்னரசு எம்.எல்.ஏ, பெரியார் நகர் மனோகரன், உதவி ஆணையாளர் அன்னக்கொடி, இணை ஆணையாளர் மங்கையர்கரசி, செயல் அலுவலர் ரமணி காந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.