முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.;
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.11) அறிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, திமுக கழக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் குறிஞ்சி என்.சிவகுமார், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஆ.செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.