ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தைத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என் தொடங்கி வைத்தார்.;
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தைத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என் தொடங்கி வைத்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என் கையெழுத்திட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி நல அலுவலர் மரு.கார்த்திக்கேயன் மற்றும் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி கையெழுத்திட்டனர்.