ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சுயேச்சை வேட்பாளர் நூதன முறையில் வேட்புமனு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட இறுதிச்சடங்கு முறையில் வந்த சுயேச்சை வேட்பாளர் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.;
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட இறுதிச்சடங்கு முறையில் வந்த சுயேச்சை வேட்பாளர் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி, இன்று (ஜன.10) காலை 11 மணி முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த நூர் முகமது என்ற சுயேட்சை வேட்பாளர் இறுதிச்சடங்கு செய்யும் முறையில் சேவண்டி, சங்கு, பால் ஆகியவற்றுடன் வேட்பு தாக்கல் செய்ய ஈரோடு மாநகராட்சி அலுவலகம் வந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான மனிஷ்யிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும்.
அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனக்கூறி இவ்வாறாக நூதன முறையில் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்ததாக அவர் தெரிவித்தார். மேலும், இவர் ஏற்கனவே நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் செருப்பு மாலை அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.