ஈரோடு மருத்துவர் கே.எம்.அபுல்ஹசனுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் சிறந்த மாநிலத் தலைவர் விருது

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய மாநாட்டில் ஈரோடு மருத்துவர் கே.எம்.அபுல்ஹசனுக்கு சிறந்த மாநிலத் தலைவர் விருது வழங்கப்பட்டது.

Update: 2024-12-29 10:30 GMT

ஐதராபாத்தில் நடந்த இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய மாநாட்டில் ஈரோடு மருத்துவர் அபுல்ஹசனுக்கு சிறந்த மாநில தலைவருக்கான விருது வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய மாநாட்டில் ஈரோடு மருத்துவர் கே.எம்.அபுல்ஹசனுக்கு சிறந்த மாநிலத் தலைவர் விருது வழங்கப்பட்டது.

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய மாநாடு ஐதராபாத்தில் டிசம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், இந்திய மருத்துவ சங்க தேசிய நிர்வாகிகள்  தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் மருத்துவர் கே.எம்.அபுல்ஹசன் சிறந்த மாநிலத் தலைவர் என்ற விருதினை வழங்கினர்.

மருத்துவர் அபுல்ஹசன் தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஆருயிர்-அனைவரும் உயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்தினார். மேலும், ஆற்றல் திட்டத்தின் கீழ், இளம் மருத்துவர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

மருத்துவ மாணவர்கள் மற்றும் இளம் மருத்துவர்களுக்கு மனநல இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு தனிப் பிரிவு தொடங்கப்பட்டது. அவர்களுக்கான வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று, தமிழ்நாடு மாநில கிளையில் முன்னேற்றம், புதுமை ஆகியவற்றுடன் மருத்துவர்களுக்கும், மருத்துவ சேவைகளுக்கும் நற்பெயரை ஏற்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மருத்துவர் கே.எம்.அபுல்ஹசனுக்கு இந்த விருது சிறப்பான அங்கீகாரம் என்று சக மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News