ஈரோடு மாவட்டத்தில் இன்று 76 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 97 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Update: 2021-10-30 14:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மேலும் 76 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 97 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 742 பேர் குணமடைந்துள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் 809 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 28ம் தேதி சிகிச்சை பெற்று வந்த 72 முதியவரும் , 29ம் தேதி 37 வயது ஆணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 684 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று 8 ஆயிரத்து 640 பேருக்கு பரிசோதனை செய்ததில் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.9%

Tags:    

Similar News