ஈரோடு மாவட்ட இன்றைய (18.06.2022) முக்கிய செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் இன்று நடந்த முக்கிய செய்திகள்.. இதோ உங்கள் பார்வைக்கு...
அந்தியூர், பவானி, கோபி மற்றும் ஈரோடு தாலுகா செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எப்போதும் InstaNews.City உடன்....
ஈரோடு மாநகர் செய்திகள் :-
* ஈரோடு காளைமாடு சிலை அருகே உள்ள ரெயில்வே நுழைவு பாலம் சீரமைக்கும் பணியானது நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைபெறவுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* கருமுட்டை விவகாரத்தில் பெண் புரோக்கர் மாலதியிடம் பெற்ற தகவல்களை வைத்து சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தையையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
* ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
பவானி செய்திகள் :-
* அம்மாபேட்டை அருகே லாரி-சரக்கு வேன் மோதிய விபத்தில் சரக்கு வேன் டிரைவர், கிளீனர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* பவானி அருகே லட்சுமிநகர் மணக்காட்டூர் பகுதியில் உள்ள கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை பவானி தீயணைப்பு துறையினர் மீட்டு, சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* கவுந்தப்பாடி அருகே உள்ள செம்பூத்தாம்பாளையம் பகுதியில் கரும்பு தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி சுப்பிரமணியம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
* பவானி அடுத்த ஜம்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கான்க்ரீட் சாலை மற்றும் தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக ரூ.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பண்ணன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
* கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சியில் 14 பயனாளிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் இல்ல கழிப்பிடம் கட்டுவதற்கான உத்தரவை பேரூராட்சி தலைவர் மணிமேகலை பழனிச்சாமி பேரூராட்சி அலுவலகத்தில் வழங்கினார்.
கோபிசெட்டிபாளையம் செய்திகள்:-
* கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் மனைவியை சேர்த்து வைக்காவிட்டால் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்து கொள்வதாக கூறி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை கோபி போலீசார் கைது செய்தனர்.
* கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.7.27 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனதாக சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
* கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் தனியார் கார்மெண்சில் வேலை செய்து வந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் பாலமுருகன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
* நம்பியூர் தீயணைப்புத்துறை சார்பில் மூனாம்பள்ளியில் நடைபெற்ற தென்மேற்கு பருவமழை மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணி குறித்த விழுப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அந்தியூர் செய்திகள் :-
* அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடி வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய ஆண் பிரேதத்தை மீட்டு பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* அந்தியூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை வேளாண்மை இயக்குனரக கூடுதல் வேளாண் இயக்குனர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.