ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 99.30 மில்லி மீட்டர் மழை பதிவு!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 99.30 மி.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 44.80 மீ.மீ மழை பெய்தது.;

Update: 2025-05-20 03:10 GMT

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 99.30 மி.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 44.80 மீ.மீ மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக, தொடர்ந்து 102 டிகிரி பாரன்ஹீட்-க்கும் மேல் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், மாவட்டத்தில் நேற்றும்  பரவலாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்தது. இதில், அதிகப்பட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 44.80 மி.மீ மழை பதிவானது.

மாவட்டத்தில் நேற்று (மே.19) திங்கட்கிழமை காலை 8 மணி முதல் இன்று (மே.20)  செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

 ஈரோடு - 16 மி.மீ, 

கவுந்தப்பாடி - 2 மி.மீ,

வரட்டுப்பள்ளம் அணை - 44.80 மி.மீ,

கோபி - 3.10 மி.மீ, 

கொடிவேரி - 3.80 மி.மீ, 

குண்டேரிப்பள்ளம் அணை - 1.60 மி.மீ, 

சத்தியமங்கலம் - 15.40 மி.மீ, 

பவானிசாகர் அணை - 12.60 மி.மீ, 

மாவட்டத்தில் மொத்தமாக 99.30 மி.மீ ஆகவும், சராசரியாக 5.84 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவானது.

Similar News