ஈரோடு மாவட்டத்தில் நேற்று 401.0 மில்லி மீட்டர் மழை பதிவு
Heavy Rain Fall - ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக பெருந்துறையில் 70.0 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Heavy Rain Fall - ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று பெருந்துறை, கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், கொடிவேரி, சத்தியமங்கலம் பகுதிகளில் கன மழை பெய்தது.
இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:-
ஈரோடு - 11.0 மி.மீ
பெருந்துறை - 70.0 மி.மீ
கோபி - 36.0 மி.மீ
தாளவாடி - 6.2 மி.மீ
சத்தியமங்கலம் - 30.0 மி.மீ
பவானிசாகர் - 17.6 மி.மீ
பவானி - 3.80 மி.மீ
நம்பியூர் - 17.0 மி.மீ
சென்னிமலை - 32.0 மி.மீ
மொடக்குறிச்சி - 22.0 மி.மீ
கவுந்தப்பாடி - 40.0 மி.மீ
எலந்தகுட்டைமேடு - 18.2 மி.மீ
கொடிவேரி - 40.0 மி.மீ
குண்டேரிப்பள்ளம் - 49.2 மி.மீ
வரட்டுப்பள்ளம் - 8.0 மி.மீ
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 401.0 மி.மீ
மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 23.0 மி.மீ மழை பதிவானது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2