ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 227.20 மி.மீ மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 227.20 மி.மீ மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக சென்னிமலையில் 27 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 227.20 மி.மீ மழை பெய்து உள்ளது.அதிகபட்சமாக சென்னிமலையில் 27 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மற்றும் பெஞ்சல் புயலால், ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று (டிச.1) மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலை பகுதியில் 27 மி.மீ மழை பதிவானது.
மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) நேற்று காலை 8 மணி முதல் திங்கட்கிழமை (டிச.2) இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நிலவரப்படி பெய்த மழையளவு விவரம்:-
ஈரோடு - 9 மி.மீ,
மொடக்குறிச்சி - 12 மி.மீ,
கொடுமுடி - 12 மி.மீ,
பெருந்துறை - 20 மி.மீ,
சென்னிமலை - 27 மி.மீ,
பவானி - 14 மி.மீ,
கவுந்தப்பாடி - 7.60 மி.மீ,
அம்மாபேட்டை - 10.20 மி.மீ,
வரட்டுப்பள்ளம் அணை - 18 மி.மீ,
கோபிசெட்டிபாளையம் - 16.20 மி.மீ,
குண்டேரிப்பள்ளம் அணை - 6 மி.மீ,
எலந்தகுட்டைமேடு - 17.60 மி.மீ,
கொடிவேரி அணை - 14 மி.மீ,
நம்பியூர் - 9 மி.மீ,
சத்தியமங்கலம் - 11 மி.மீ,
பவானிசாகர் அணை - 11.20 மி.மீ,
தாளவாடி - 6.40 மி.மீ,
மொத்தமாக 227.20 மி.மீ ஆகவும், சராசரியாக 13.36 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவானது.