ஈரோடு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: 243.80 மி.மீ பதிவு
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னிமலையில் 52 மி.மீ மழைப்பொழிவு பதிவானது.;
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னிமலையில் 52 மி.மீ மழைப்பொழிவு பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
அதன்படி, நேற்று (11ம் தேதி) ஈரோடு மாநகர் பகுதியில் வழக்கம் போல் வெயில் அடித்தது. அதைத்தொடர்ந்து, இரவு 9.30 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித் தீர்த்தது. அதன் பின்னரும் மழை தூறிக் கொண்டே இருந்தது.
மழை காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சிரமப்பட்டனர். ஈரோடு வ.உ.சி. பூங்கா தினசரி காய்கறி மார்க்கெட் உள்பட நகரின் தாழ்வான பகுதியில் மழை நீர் குட்டை போல் தேங்கி நின்றது.
இதேபோல், மாவட்டத்தில் சென்னிமலை, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இரவில் கொட்டித் தீர்த்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் நேற்று (11ம் தேதி) காலை 8 மணி முதல் இன்று (12ம் தேதி) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
ஈரோடு - 38 மி.மீ,
மொடக்குறிச்சி - 18 மி.மீ,
பெருந்துறை - 10 மி.மீ,
சென்னிமலை - 52 மி.மீ,
பவானி - 4.20 மி.மீ,
கவுந்தப்பாடி - 12.40 மி.மீ,
அம்மாபேட்டை - 26 மி.மீ,
வரட்டுப்பள்ளம் அணை - 19.40 மி.மீ,
கோபிசெட்டிபாளையம் - 9.20 மி.மீ,
எலந்தகுட்டைமேடு - 17.60 மி.மீ,
கொடிவேரி - 8.20 மி.மீ,
குண்டேரிப்பள்ளம் அணை - 12 மி.மீ,
நம்பியூர் - 12 மி.மீ,
சத்தியமங்கலம் - 3 மி.மீ,
பவானிசாகர் - 1.80 மி.மீ,
மாவட்டத்தில் மொத்தமாக 243.80 மி.மீ ஆகவும் சராசரியாக 14.34 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.