ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பரிசோதனைக்கான கட்டணத்தை இனி ஆன்லைனில் செலுத்தலாம்
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சி.டி., ஸ்கேன் பரிசோதனைக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சி.டி., ஸ்கேன் பரிசோதனைக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து உடல் நிலவரத்தை தெரிந்து கொள்ள அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பெரும்பாலோனோர் அரசு மருத்துவமனைகளையே நாடி வருகின்றனர்.
ஏனெனில், அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் எடுக்க கட்டணமாக ஒரு பகுதிக்கு ரூ.500-ம், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.2,500-ம் வசூலிக்கப்படுகிறது. முன்பெல்லாம் அனைவரும் பணத்தை கையில் எடுத்து வருவார்கள்.
ஆனால் கூகுள் பே, பேடிஎம் என வந்தபிறகு அனைவரும் கியூஆர் கோடு மூலமே பணத்தை செலுத்த விரும்புகின்றனர். இதனால், மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் கையில் பணம் கொண்டு வருவதில்லை.
இங்கு பரிசோதனை கட்டணம் பணமாக வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் ஏடிஎம் மையங்களையும், இல்லாதவர்கள் கைப்பேசி வங்கி இருப்பில் உள்ள பணத்தை எப்படியாவது படமாக பெற உதவியை நாடும் நிலையே தொடர்ந்தது.
இதனைக் கருத்தில், கொண்டு தமிழகத்தில் உள்ள அரசு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் மையங்களில் பரிசோதனை கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பரிசோதனைக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது. இதற்காக, சிடி ஸ்கேன் பிரிவில் கட்டணங்கள் செலுத்தும் கியூஆர் கோடு ஸ்கேன் செய்ய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், ஏடிஎம் கார்டு மூலம் பணம் செலுத்த சுவைப்பிங் மிஷின் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிசோதனைக்கு வருபவர்கள் எளிதாக கட்டணங்களை செலுத்தி சிரமம் இன்றி பரிசோதனை எடுத்துச் செல்ல முடியும் என்று சிடி ஸ்கேன் பிரிவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.