மருந்தாளுநர் போட்டி தேர்வுக்கு இலவச இணையவழி பயிற்சி: ஈரோடு ஆட்சியர் தகவல்!
மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் மருந்தாளுநர் போட்டித் தேர்வுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;
மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் மருந்தாளுநர் போட்டித் தேர்வுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் மருந்தாளுநர் பணிக்காலியிட (Pharmacist) போட்டித் தேர்வுகளுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் துவக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது.
இப்பணிக்காலியிடத்திற்கான தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இவ்விணையவழிப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமிருப்பின் தங்களது விவரங்களை https://forms.gle/HMwR3ajGGmYNxWTr9 என்ற கூகுள் ஃபார்ம் லிங்கில் பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த ஆண், பெண் இருபாலர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.