ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து: கோரிக்கைகளை பதிவு செய்ய வாட்ஸ் அப் எண் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;

Update: 2025-01-09 09:00 GMT

பொதுமக்கள் கோரிக்கைகளை வாட்ஸ் அப் எண் மூலம் பதிவு செய்யலாம்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த ஜன.7ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டதால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இதர குறைதீர்க்கும் முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு மாவட்டம் ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு பிப்.5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதையொட்டி, நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டதால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும், தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை ஈரோடு மாவட்டம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தினை 1077 மற்றும் 0424-2260211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மேலும், 9791788852  மூலமும் என்ற வாட்ஸ் அப் எண் மூலம் கோரிக்கைகளை பதிவு செய்து தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News