ஈரோடு ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று (ஜன.6) நடைபெற்றது.

Update: 2025-01-06 12:45 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பேசிய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று (ஜன.6) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பேரூராட்சிகள் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில், குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதை ஏதுவாக மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை அமைத்தல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சாலை, தெரு விளக்குகள், வடிகால், சிறுபாலம் அமைத்தல், மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.


தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் ஊர்தியில் ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து பணிகாலத்தில் மரணமடைந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சத்திற்கான காசோலைகளை  அவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு (ஈரோடு), துணை இயக்குநர் குலால் யோகேஷ் விலாஷ் (சத்தியமங்கலம் வன கோட்டம்), சுதாகர் (ஆசனூர்), உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), செல்வராஜ் (வளர்ச்சி), பிரேமலதா (நிலம்) துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின், மாவட்ட திட்ட மேலாளர் உதயநிதி உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News