ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 41வது பொதுப் பேரவை கூட்டம்
பவானி பவிஷ் பார்க் கலையரங்கில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என். கிருஷ்ணராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.;
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 41- வது பொதுப் பேரவை கூட்டமானது, பவானி பவிஷ் பார்க் கலையரங்கில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் 41வது ஆண்டுக்கான ஆண்டறிக்கை பொதுமேலாளர் ரவிச்சந்திரன் அவர்களால் வாசிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் செந்தமிழ் செல்வி, இணைப்பதிவாளர் சீனிவாசன், முதன்மை வருவாய் அலுவலர் ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு இயக்குனர்கள், ஈரோடு மாவட்ட அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், வங்கியின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்