இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு: இணையதளத்தில் விண்ணப்பிக்க ஈரோடு ஆட்சியர் அழைப்பு!

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்க உள்ளதால், இப்படைப்பிரிவில் சேர விருப்பமுள்ளவர்கள் வருகிற ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-03-26 11:40 GMT

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்க உள்ளதால், இப்படைப்பிரிவில் சேர விருப்பமுள்ளவர்கள் வருகிற ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய ராணுவத்தில் 2025 2026ம் ஆண்டிற்கான ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளர்க்/ ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி), டிரேட்ஸ்மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி) ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பிற்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 11 மாவட்டத்தை சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், உடற்தகுதி, மருத்துவ தகுதி குறித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மேற்கண்ட இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News